சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9.00 மணிக்கு, நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து 4 மணிவரை நடைபெற்றது. குறித்த போராட்டத்தை யாழ்ப்பாண மாவட்ட காணாமல்போனோரின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆரம்பித்துள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் வவுனியாவில் நடைபெறும்

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டை- அனோமா பொன்சேகா(காணொளி)

Posted by - January 26, 2017

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற, யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, அனோமா பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா பொன்சேகா, மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.யுத்தத்திற்கு முன்னர் அதனை செய்யமுடியாத நிலையிருந்தது. இன்று

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 26, 2017

  வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகதத்தினை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருணாரட்ன ஹெட்டியாராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 26, 2017

  நுவரெலியாவில், ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது. கொழும்பு கொலணாவ பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு சென்ற கொள்கலன் இன்ற விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த குறித்த கொள்கலன் ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் பிரதான வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானது. கொள்கலனில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது.இந்த விபத்தினால் சில மணிநேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மாணவர் விடுதியில் தீவிபத்து(காணொளி)

Posted by - January 26, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மின்னொழுக்கு காரணமாகவே தீவிபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.    

வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் இன்று மன்னார், கிளிநோச்சி, மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவரும் நிலையில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா வர்த்தக

வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் (காணொளி)

Posted by - January 26, 2017

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நான்காவது நாளாக இன்றும் முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்படவிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளின் பேரணிக்கு பொலிசார் முதலில் தடைவிதித்த போதிலும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தங்கள் முச்சக்கர

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக, வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகள் முற்றுகையிட்டனர். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதமிருப்பவர்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் அசமந்தபோக்கு தொடர்பாகவும் காரியாலய

கடன்களை அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டு வைக்க விருப்பமில்லை!

Posted by - January 26, 2017

நாட்டின் கடன்களை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு வைக்க எனக்கும், ஜனாதிபதிக்கும் விருப்பமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகளை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. எனினும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர். விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில்