ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது(காணொளி)

280 0

 

நுவரெலியாவில், ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது.

கொழும்பு கொலணாவ பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு சென்ற கொள்கலன் இன்ற விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்த குறித்த கொள்கலன் ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் பிரதான வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானது.

கொள்கலனில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது.இந்த விபத்தினால் சில மணிநேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் குறித்த கொள்கலனில் 33 ஆயிரம் லீற்றர் டீசல் இருந்ததாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.