கிழக்கு பல்கலையின் கற்றல் நடவடிக்கை 31இல் ஆரம்பம்
கிழக்கு பல்கலைகழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக பீட இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மாணவர்களினால் கடந்த 18ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக தமது உடைமைகளுடன் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் தங்கியிருந்தனர். இதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்

