உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம், கொலை செய்தவர்களுக்கு புரியாது-சிவஞானம் சிறீதரன்

237 0

இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட வெளிவந்தன.

அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்று வரை நீதி கிடைக்காது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறினார்.

பாராளுமன்றில் இன்று  இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து அவர்,

கடந்த நான்கு நாட்களாக வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஒரு அரசியல்வாதி சாதாரணமாக வெளி நாட்டில் காணாமல் போனோர் உயிருடன் இருக்கலாம் என புதுக்கதையினை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்.

சாகும் வரை உண்ணாவிரதத்தை உறவுகள் மேற்கொண்டு இருக்கையில் ஒரு அரசியல் வாதி காணாமல் போனவர்கள் வெளிநாட்டில் உயிரோடு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இது போராட்டம் செய்பவர்களை அலட்சியப்படுத்தும் செயற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம் கொலை செய்தவர்களுக்கு புரியாது.

இந்த விடயமே வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்தமைக்கான காரணமாக இருக்கலாம். காணாமல் போன உறவுகளின் உயிர்களை பிரிக்க அரசு முனைகின்றதா?

இது தொடர்பில் ஏன் ஜனாதிபதி மௌனம் காக்கின்றார். மக்களின் பிரச்சினை மூடி மறைக்கப்படுகின்றது. இதற்கு பதில் கூற முடியவில்லை என்றால் இது ஜனநாயக ஆட்சி என்று எப்படி கூறுவது எனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.