மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன(காணொளி)
மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ள மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி, ஆயித்தியமலை-கரடியனாறு பிரதான வீதி, கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதி ஆகியவற்றினால் வெள்ள நீர் பாய்ந்துசெல்வதனால் எழுவான் கரைக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் பல பகுதிகளில் வீதிகளால் வெள்ளம் பாய்ந்துசெல்வதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேச

