யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி(காணொளி)
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. நாளையும், நாளை மறுதினமும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நாடா வெட்டித்திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 3 பிரிவுகளாக 300 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ,யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், யாழ்

