மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

295 0

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு, மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் இன்று தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாடங்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பாடசாலைக்குத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியரும், மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய இணைச்செயலாளருமான எஸ்.தயாளனின் ஏற்பாட்டில், ஆலய பரிபாலன சபையினால், விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஒரு வகுப்பறைக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய முன்னாள் தலைவர் எஸ்.குருகுலசிங்கத்தினால் பாடசாலைக்கான வில்பரோ உபகரணமும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ சேக்கிழார், ஆலய பரிபாலன சபை தலைவர் எஸ்.ரவிகரன், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.