ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

268 0

நுவரெலியாவில், ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.

நுவரெலியா வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை-குயில்வத்தை பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில், நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை- காலியை நோக்கி ஏற்றிச்சென்ற குறித்த வான், குயில்வத்தை பகுதியில் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதால், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதுடன், வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.