பிணைமுறி மோசடி விவகாரம்- ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தின் இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள், இன்று காலை 7.15க்கு மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். படோவிட்ட பிரதேசத்துக்கு அருகில் உள்ள லேக்சைட் ஹோட்டலுக்கு பின்புறமாக உள்ள கால்வாயிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த ஹோட்டலின் முன்புறமாகவுள்ள படோவிட்ட பாலத்துக்கு அருகில், கால்வாயில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தெஹிவளை காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர். இந்த இரு சடலங்களும், இதுவரை அடையாளம்
தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுந்தரராஜன், இதனைத் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து, அதன் பிறகு, சட்டமும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்தப் போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்துகொள்ள அதிக அளவிலான மாடுகள் வருவதாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்காற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதையடுத்து, குறித்த சிறுவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு தமிழர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. குனாரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள்
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கு, கிழக்கை ஸ்திரமாக அபிவிருத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்
காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் நாடாளுமன்ற்தில் நேற்று இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின்போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார். காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டவிரோதமானது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டுள்ளதாக மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். இந்த விடயத்தில் சபாநாயகர்
கோப் குழுவின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே. வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் கவனத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். கோப் குழுவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாக்கி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றின் மனு பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள
தற்போதைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை ஆராயந்து விருது வழங்கவேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளில் விருது வழங்கப்படுவதுபோல அரசியல்வாதிகளுக்கு விருது வழங்கும் திட்டமொன்று உள்ளதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது காலத்தின் தேவையாகவும் உள்ளது. தொழில் புரியும் மக்களை அடிப்படையாக் கொண்ட ஒரு மத்தியஸ்தர் குழுவை இதற்காக நியமிக்கலாம். ஏனெனில், அவை அனைத்தினதும் அடிப்படை பொறுப்பு அங்குதான் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி 15 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அந்த வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு அரிசி, நாடு மற்றும் சம்பா