இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி ஐந்து ரூபாவாக குறைப்பு

230 0

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளது.

இதனால் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி 15 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அந்த வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி, நாடு மற்றும் சம்பா ஆகிய அரிசி வகைகளுக்கான விசேட வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமான விலையில் விற்க முடியாது என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.