இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூவர் அடங்கிய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்பிள்ளை, ஓய்வு பெற்ற நீதியரசர்களான கே.டீ. சித்ரசிறி மற்றும் நீதியரசர் பீ.எஸ். ஜயவர்தன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

