காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் விவாதம் நடத்த தயார் – லக்ஷ்மன் கிரியல்ல

321 0

காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் நாடாளுமன்ற்தில் நேற்று இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின்போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டவிரோதமானது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டுள்ளதாக மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட வேண்டும் என்றும் தினேஸ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து சபையில் முழுநாள் விவாதம் நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.