காணாமல் போன மீனவர்கள் மீட்பு

Posted by - January 29, 2017

கடந்த நொவம்பர் மாதம் 28ஆம் திகதி திருக்கோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 6 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் இவர்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் முன்று மாதங்களாக எந்த தகவலும் தமக்கு கிடைத்திருக்கவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு

Posted by - January 29, 2017

அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சிறந்த கல்வி இல்லையென்றால், போதுமான சுகாதார சேவை இல்லை என்றால், வாழ்வதற்கு ஜீவநோபாயம் இல்லை என்றால், இருப்பதற்கு இடமில்லை என்றால், ஏன் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இந்த கேள்வி எம்மிடம் இருக்கின்றது. ஆனாலும்

நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

Posted by - January 29, 2017

நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச கரும மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோகனேசன் இதனை தெரிவித்தார். தெரனியாகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதனைவிடுத்து, தன்னிச்சையாக செயற்படும் எவருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். பணிச் செய்யவே தாங்களை அர்ப்பணித்துள்ளோம். மாகாண சபைகள், நகர

எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - January 29, 2017

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிச்சக்தி துறை பிரதி அமைச்சர் சந்திம வீரகொடி இதனை தெரிவித்தார். நேற்று பிற்பகல் வேளையில் துறைமுக வளாகத்தில் உள்ள குழாயில் சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து மசகு எண்ணெய் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை

Posted by - January 29, 2017

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கண்டியில் முன்னெடுக்கப்பட்டது. அரச பணியாளர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் படிப்படியாக குறைவடைந்து வருவதாக, ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சங்கங்கத்தின் உறுப்பினரான வணக்கத்துக்குறிய அகுனவில கஸ்சப்ப தேரர் குறிப்பிட்டார். அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், குறைந்த பட்சம் ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவுகளை ஓரளவேனும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும்

இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை

Posted by - January 29, 2017

பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின இதனை தெரிவித்தார். விரைவில் இதற்கான யோசனை ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாரதிகள் இல்லாமல் அதிகளமான பேருந்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தமக்கு முறையிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறைந்தபட்சம் ஆயிரம் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் அதிக

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம்

Posted by - January 29, 2017

ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். அனுரதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தற்போது மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற தலைப்பில் போராட்டங்கள், பேரணிகளை நடத்துகின்றனர். அத்தகைய போராட்டங்கள் மற்றும் பேரணிகள் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்ட அரச சொத்துகளின் மூலம் சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த கறுப்புப் பணத்தை கொண்டே ஆர்ப்பாட்டத்திற்காக

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017

  கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நாடகம்-செம்முகம் கலைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நிறுவுனர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தற்கொலைக்கு பொறுப்பு எமது சமூகமே என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.  

கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017

நுவரெலியா, கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி தேவை என கொட்டகலை பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி, ஒரு வாரத்திற்குள் நவீன முறையிலான புதிய அம்புலன்ஸ் வண்டியினை நேற்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார். இதற்கு நன்றி கூறும் நிகழ்வும், அம்புலன்ஸ் வண்டியினை பொதுமக்கள் சேவைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.சாவித்ரி தலைமையில் இன்று

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், சுவிஸர்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ஒருவர், 2009ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இருந்து விலகி, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்தார். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு சுவிஸர்லாந்து அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு மீண்டும் இலங்கையை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்த அவரை,