அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு

322 0

அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சிறந்த கல்வி இல்லையென்றால், போதுமான சுகாதார சேவை இல்லை என்றால், வாழ்வதற்கு ஜீவநோபாயம் இல்லை என்றால், இருப்பதற்கு இடமில்லை என்றால், ஏன் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

இந்த கேள்வி எம்மிடம் இருக்கின்றது. ஆனாலும் மற்றவர்களிடம் இல்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.