நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

227 0

நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கரும மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோகனேசன் இதனை தெரிவித்தார்.

தெரனியாகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனைவிடுத்து, தன்னிச்சையாக செயற்படும் எவருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பணிச் செய்யவே தாங்களை அர்ப்பணித்துள்ளோம். மாகாண சபைகள், நகர சபைகள், நாடாளுமன்றம், அமைச்சரவை செல்வது தேங்காய் உடைப்பதற்கு அல்ல. பணிசெய்யவே.
இந்த அரசாங்கம் விளையாட்டும் அரசாங்கம் அல்ல. நாங்கள் விளையாட்டும் அமைச்சர்கள் அல்லவெனவும் அமைச்சர் மனோ கணேஸன் குறிப்பிட்டார்.