ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம்

216 0

ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அனுரதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தற்போது மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற தலைப்பில் போராட்டங்கள், பேரணிகளை நடத்துகின்றனர்.

அத்தகைய போராட்டங்கள் மற்றும் பேரணிகள் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்ட அரச சொத்துகளின் மூலம் சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த கறுப்புப் பணத்தை கொண்டே ஆர்ப்பாட்டத்திற்காக ஆட்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான உணவு உட்பட்ட பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

இலங்கையில் ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் இந்த போராட்டங்கள் முற்றாக முடங்கும் என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.