தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முயற்சி
தமிழக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க ஆளும்கட்சி முயற்சிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க ஆளும்கட்சி முயற்சிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
சென்னை வன்முறை தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்களை கூடுதல் போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடன் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று பிறப்பித்தார்.
தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு மாநாட்டை விரைவில் நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த மாநாடானது பாகிஸ்தானில் நடைப்பெறவிருந்தது. பின்னர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் நடத்தப்படவிருந்த 19வது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என இந்திய அறிவித்தது. அதனை தொடந்து பாதுபாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி உறுப்பு நாடுகளான
பலபிட்டிய கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டவர்களை கடல்வளப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ரஷ்ய நாட்டவர்களான இவர்கள் வாடகைக்காக பெறப்பட்ட படகொன்றை பயன்படுத்தியே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இவர்களால் பயன்படுத்தப்பட்ட இரண்டு விசேட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமது நாட்டுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளி விவகார அமைச்சின் பேச்சாளரான ஹூவா சுன்யிங் ஊடக சந்திப்பொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடவியலாளர்களால் ஹம்பாந்தோட்டை துறைமுக எதிர்ப்பு விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். ஹம்பாந்தோட்டை வத்தக வலய திட்டங்களின் மூலம் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரண்டு நாடுகளும் பாரம்பரிய
நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை 159 ரூபாவுக்கும், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாவிற்கும், பாசி பயறு கிலோ ஒன்றின் விலை 205 ரூபாவிற்கும் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துபாய் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 405 ரூபாவிற்கும், தாய்லாந்து நெத்தலி கிலோ ஒன்றின் விலை 490 ரூபாவிற்கும், விதை கிழங்கு கிலோ ஒன்றின் விலை 115
சிவனொளிபாத மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிந்த வேளை ஈதிகட்டு பான பகுதியில் வைத்து இவர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த காவற்துறை அதிகாரி கம்பஹா மென்டிமுள்ள பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலம் தற்போது மஸ்கொலியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு அமெரிக்கா வந்த பலர் அமெரிக்க வானூர்தி நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இவர்களை விடுவிக்குமாறு அமெரிக்காவில் உள்ள பல பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக நிவ்யோர்க் நகரின் ஜோன் ஒப் கெனடி வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல வானூர்தி நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா,