சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிப்பு

252 0

நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை 159 ரூபாவுக்கும், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாவிற்கும், பாசி பயறு கிலோ ஒன்றின் விலை 205 ரூபாவிற்கும் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துபாய் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 405 ரூபாவிற்கும், தாய்லாந்து நெத்தலி கிலோ ஒன்றின் விலை 490 ரூபாவிற்கும், விதை கிழங்கு கிலோ ஒன்றின் விலை 115 ரூபாவிற்கும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.