சர்வதேச தீவிரவாதம் குறித்து ட்ரம்ப் – புட்டின் பேச்சு

319 0

முஸ்லிம் பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு அமெரிக்கா வந்த பலர் அமெரிக்க வானூர்தி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களை விடுவிக்குமாறு அமெரிக்காவில் உள்ள பல பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக நிவ்யோர்க் நகரின் ஜோன் ஒப் கெனடி வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல வானூர்தி நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யோமன் ஆகிய 7 நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு ட்ரம்ப் அனுமதி மறுத்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றைய தினம் ரஸ்ய ஜனாதிபதி விளாடமீர் புட்டினுடன் தொலை பேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது, பலஸ்தீன் ஸ்ரேல் பிரச்சினை, ஈரானில் அணுவாயுத விவகாரம், யுக்ரேன், மற்றும் வடகொரிய தென்னொரிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளர்.