தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு மாநாட்டு விரைவில் நடத்தப்படும் – பாகிஸ்தான் நம்பிக்கை

196 0

தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு மாநாட்டை விரைவில் நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் குறித்த மாநாடானது பாகிஸ்தானில் நடைப்பெறவிருந்தது.

பின்னர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இதனையடுத்து பாகிஸ்தானில் நடத்தப்படவிருந்த 19வது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என இந்திய அறிவித்தது.

அதனை தொடந்து பாதுபாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி உறுப்பு நாடுகளான நேபாள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் குறித்த மாநாட்டை புறக்கணித்தன.

இதன்போது இலங்கை மாநட்டு தொடர்பில் மத்திய நிலையில் இருந்து வந்தது.

இந்தநிலையில், பாகிஸ்தானின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் சர்தார் அஜீஸ், தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு நாடுகளின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பஹதுர் தாபாவை சந்தித்தபோதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.