பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலி

Posted by - January 30, 2017

பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஆதரிக்கிற அபு சயாப் கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அந்த கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் தற்போது பிளிப்பைன்ஸ் ராணுவம் ஈடுப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன், அந்த இயக்கத்தின் தலைவர் காயமடைந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமது கட்சி மீது குற்றம் சுமத்தப்படுமானால் பதவி விலக தயார் – அமைச்சர் தலதா

Posted by - January 30, 2017

ஜக்கிய தேசிய கட்சி சட்டவிரோதமாக செயற்படுவதானால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ரத்தினபுரி – கஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசியலை முன்னிலைப்படுத்தி இனவாதத்தை முன்னெடுத்து செல்கின்றனர். அவ்வாறனவர்கள் ஜனாதிபதி நாட்டை பிரிக்க போகிறார், பிரதமர் வடபகுதியை தாரைவார்க்க போகிறார் என கூறும் ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை சீரழித்தனர். அவ்வாறான நாட்டை சீர் செய்யவே தற்;போதைய

கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால்

Posted by - January 30, 2017

முடிந்தால் கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால் விடுத்துள்ளது. கொழும்பதில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை 20 ஆவது அரசியில் சீர்த்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் மக்கள் உரிமை தொடர்பான அதிகாரங்களை இரத்துசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜெயந்த சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பு

Posted by - January 30, 2017

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். கடந்த வருடம் நடைப்பெறவிருந்த 19வது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டானது ரத்து செய்யப்பட்டதன் பின்னர், கூடும் முதலாவது சந்திப்பாக இதுவாகும். இந்த சந்திப்பு நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டுக்கான பாதீடு உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெறும்பாலும் இந்த சந்திப்பின்போது அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பிலும் ஆராயப்படும் எனவும்

தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

Posted by - January 30, 2017

தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயக முறையில் செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்களுக்கும், தீவிரவதத்ததை வலியுறுத்துகின்ற தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு

நிபந்தனைகளுடனான ஜீ.எஸ்.பி வரிச்சலுகை – நாடு முன்னேறாது – மஹிந்த

Posted by - January 30, 2017

நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பெறப்படும்பட்சத்தில் நாடு என்ற வகையில் அபிவிருத்தியை எட்ட முடியாதுபோகும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். யுத்தத்தை நிறைவு செய்து பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பாரம்பரியங்களை மறந்துவிட்டு புதிய தலைமுறையினருக்கு மேற்கத்தைய கலாசாரத்தை புகுத்த முனைவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகள் நாட்டின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யெமனில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலி

Posted by - January 29, 2017

யெமனில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலியாகினர். ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின் நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும். யெமன் நாட்டில் உள்நாட்டுப்போர் இடம்பெற்றுவருகிறது. யெமனர் தலைவர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டுவருகின்றனர். யெமன் அரச தரப்பினருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான்,

சுதந்திர கட்சியை பிளவுபடுத்திய மஹிந்த – ஆனந்த அலுத்கமகே

Posted by - January 29, 2017

ஒருமைப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ கடந்த 27ஆம் திகதி பிளவுபடுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத் கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆனந்த அலுத்கமகே இதனை தெரிவித்தார். கருணா அம்மான் தேசிய தலைவர்களை போன்று நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டார். கௌரமிக்க சிறுபான்மை தமிழ் முஸ்லிம் தலைவர்கள் நுகேகொட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனவே, நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டமானது இனவாதத்தின் ஆரம்பமாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனுக்கு ஹெல உறுமய கண்டனம்

Posted by - January 29, 2017

தெற்கில் உள்ள சில அடிப்படைவாதிகள் தம்மை கொலைசெய்ய முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்தை ஹெல உறுமய கண்டித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்த கண்டனத்தை வெளியிட்டார். தமிழ் தலைவர்களை கொலை செய்யும் அளவிற்கு தெற்கில் இனவாதிகள் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சுமந்திரன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்; ஓய்ந்துள்ள நிலையில் எருமை பந்தயத்திற்கு போராட்டங்கள்

Posted by - January 29, 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சற்று தனிந்துள்ள நிலையில் தென்னிந்திய மாநிலமான கர்நாட்டகாவில் எருமை பந்தயத்திற்கு அனுமதி வழங்குமாறு போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. கன்னட மாநிலத்தில் கம்பளா என அழைக்கப்படும் கன்னட பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமது பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய போட்டிகளை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி கன்னட மாநில மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இதற்கு எதிர்கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் ஆதரவு வழங்கியுள்ளன. இந்த