தெற்கில் உள்ள சில அடிப்படைவாதிகள் தம்மை கொலைசெய்ய முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்தை ஹெல உறுமய கண்டித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்த கண்டனத்தை வெளியிட்டார்.
தமிழ் தலைவர்களை கொலை செய்யும் அளவிற்கு தெற்கில் இனவாதிகள் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சுமந்திரன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலைசெய்யும் நோக்கில் செயற்பட்ட நான்கு முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

