யெமனில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலி

240 0

யெமனில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலியாகினர்.

ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின் நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.

யெமன் நாட்டில் உள்நாட்டுப்போர் இடம்பெற்றுவருகிறது.

யெமனர் தலைவர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டுவருகின்றனர்.

யெமன் அரச தரப்பினருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் செயற்படுகின்றன.

சவுதி கூட்டுப்படைகளின் தாக்குதலின்போது தொடர்ந்து அப்பாவி மக்களும் பலியாகி வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், யெமன் நாட்டில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலில் 8 சிறுவர்களும் 8 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.