தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பு

304 0

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

கடந்த வருடம் நடைப்பெறவிருந்த 19வது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டானது ரத்து செய்யப்பட்டதன் பின்னர், கூடும் முதலாவது சந்திப்பாக இதுவாகும்.

இந்த சந்திப்பு நேபாளத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டுக்கான பாதீடு உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெறும்பாலும் இந்த சந்திப்பின்போது அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பிலும் ஆராயப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடம் பாகிஸ்தான், இஸ்லாமாபாதில் நடைப்பெறவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடானது இந்திய பாகிஸ்தான் மோதல்களை அடுத்து கால வரையரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அண்மையில், குறித்த மாநாட்டை எவ்வாறேனும் நடத்தியே தீருவதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.