வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - February 3, 2017

வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். வுவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீண்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாணசபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவபொம்மைக்கு பாடை கட்டி கொள்ளிக்குடம் வைத்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது. பணிப் பகிஸ்கரிப்பு நடைபெறும் இலங்கை போக்குவரத்துச்சபை அலுவலகத்திற்கு வருகை தந்த வடக்கு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்று காலை 8.00மணி தொடக்கம் முற்பகல் 12.00மணி வரை பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடாத்தப்பட்டது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று காலை சிகிச்சைகளுக்காக வருகைதந்த

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை

Posted by - February 3, 2017

இந்நாட்டு கேள்வி பத்திர முறையினை வௌிப்படையாக பராமரிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதனூடாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இந்நாட்டு அரசின் கேள்வி பத்திரங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

Posted by - February 3, 2017

ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.

வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

Posted by - February 3, 2017

வவுனியாவில் இ.போ.ச பேருந்து சாரதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்றில் இருந்து ஈடுபட்டுள்ளனர். சாரதிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதையும், வவுனியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் ஆதிக்கம் அதிகாமாக இருப்பதனையும் கண்டித்து நேற்றைய தினம் அரச பேருந்து ஊழியர்கள் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினம், யாழ் கோண்டாவில் பேருந்து நிலையத்தின் முன்பாக வடக்கு

அமெரிக்காவைத் தொர்ந்து குவைட்டும் அதிரடி

Posted by - February 3, 2017

முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை உத்தரவு விதிக்கப்பட்டதற்கு அமைய குவைட் நாடும் 5 நாடுகளுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கமைய சிரிய, ஈராக், ஈரான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே இவைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. தீவிரவாதிகள் தமது நாட்டிற்கு வருவதனை தடை செய்வதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குவைட் அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக், ஈரான், லிபியா, யெமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார்.

அதிக விலையில் அரிசி – விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க உத்தரவு

Posted by - February 3, 2017

அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க நுகர்வோர் விவகார சபைக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார். அரிசி இறக்குமதி வரியினை குறைத்துள்ளதன் காரணமாக  ஒரு கிலோ அரிசியினை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் , அரிசி விற்பனையாளர்கள் எவரும் குறித்த விலைக்கு

அறிவுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Posted by - February 3, 2017

9வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி அது அரசின் தலைவருக்கு ஒதுக்கப்பட்டமையானது , அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அறிவை பெற்றுக்கொடுப்பதற்கான கடமையை நிறைவேற்றும் போது குழந்தைகள் மற்றும் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்

மேன் பவர் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்காக தடையுத்தரவு நீடிப்பு

Posted by - February 3, 2017

மேன் பவர் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு வௌியிட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நிரந்தர சேவைக்கு இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து , மேன் பவர் ஊழியர்கள் குழுவொன்று கடந்த மாதம் 26ம் திகதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இன்று முற்பகல் மேன்பவர் ஊழியர்கள் சிலர் நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். மேன்பவர் ஊழியர்களை நிரந்தர சேவைக்கு இணைத்துக்

மதுபான சோதனையில் தோல்வியடைந்த பெண் விமானிக்கு நேர்ந்த கதி..

Posted by - February 3, 2017

இந்தியா நாட்டுக்கு சொந்தமான ஏயர் இந்தியா விமான சேவையின் பெண் விமானி ஒருவர் மதுபான சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. இதனால் 3 மாதங்களுக்கு அவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவரின் பணியாளர் தொகுதியில் மேலும் ஒருவரும் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து ராஜ்கோட் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தின் பெண் விமானி ஒருவரே இவ்வாறு மதுபான சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.