மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ உணர்வு பூர்வமாக ஆரம்பம்

Posted by - February 10, 2017

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர முன்றலிலிருந்து ஆரம்பமானது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான த.வசந்தராசா, சி.வி.விக்னேஸ்வரன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தமிழக அரசியல் பிரச்சினைக்கு இன்று முடிவு?

Posted by - February 10, 2017

தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற பரபரப்பான சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டிய மாநில ஆளுனர் வித்தியாசாகர் ராவோ நேற்றையதினம் சென்னை திரும்பினார். அவர் முதலில் பன்னீர்செல்வத்தையும்இ பின்னர் சசிகலாவையும் சந்தித்தார். பன்னீர்செல்வம் தாம் ஏற்கனவே கையளித்திருந்த பதவி விலகல் கடிதத்தை மீளப்பெறுவது தொடர்பாகவும்இ தாம் சசிகலா தரப்பினரால் பலவந்தப்படுத்தப்பட்டமை குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதன்அடிப்படையிலான சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்து அவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக

ஹட்டனில் கோர விபத்து

Posted by - February 10, 2017

ஹட்டன் – பொஹவந்தலாவ பிரதான வீதி திக் ஓய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. குறித்த முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் கண்டுபிடிப்பு

Posted by - February 10, 2017

பாடசாலை விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காவற்துறை மற்றும் மாணவரின் உறவினர்களின் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடிய சாரானத் கல்லூரியில் 13 ஆம் தர கலைப் பிரிவு மாணவரே இவ்வாறு நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார். சிற்றூந்து ஒன்றில் வந்த நபர்கள் தன்னை கடத்தி தாக்கியதனை தொடர்ந்து மீண்டும் குளியாப்பிடிய நகரில் விட்டுச் சென்றதாக குறித்த மாணவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே

காணாமல் போனோர் விடயம் – பதில் வழங்குவதற்கு அரசாங்கம் கால அவகாசம்.

Posted by - February 10, 2017

காணாமல் போனோர் விடயத்தில் பதில் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரையில் கால அவகாசம் கோரியுள்ளது. மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வவுனியாவில் கடந்தமாதம் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துத் தருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டிருந்தனர். இதன்படி நேற்றைய சந்திப்பு நடைபெற்றிருந்த போதும், அதில் ஜனாதிபதியோ பிரதமரோ பங்குபற்றி இருக்கவில்லை. நீதி அமைச்சர், சட்ட ஒழுங்குகள்

தேர்தல் தாமதம் காரணமாக ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

Posted by - February 10, 2017

துர்திஸ்ட வசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். எதிர்கால் தேர்தல்கள் குறித்து நேற்று ஒன்றிணைந்த எதிர் கட்சியினர் தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவரை சந்தித்து கலந்துறையாடினர். இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - February 10, 2017

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 11 ஆயிரத்து 582 சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுற்றலா சென்றுள்ளனர். 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 580 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளதாக சுற்றுலாத்

அபிவிருத்தி இல்லை எனில், சிறிய நாடுகள் இலங்கையை முந்தும்.

Posted by - February 10, 2017

நாட்டை தற்போது அபிவிருத்தி செய்யவில்லை எனில் 15 வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை முந்தி செல்லும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். குருநாகலையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் புதிய கைத்தொழில் வலையங்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். கண்டி மாவட்டத்திற்கு பாரிய தொரு வேலைத்திட்டம் உள்ளது. தாம் கண்ட இலங்கை வேறு எனவும் தெரிவித்த பிரதமர், அணுகுண்டு

102 பாடசாலைகளுக்கு டெங்கு எச்சரிக்கை

Posted by - February 10, 2017

நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொழும்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 102 பாடசாலைகள் டெங்கு தொற்று

சுதந்திர துறைமுகமாக மாற்றமடையவுள்ள இலங்கை துறைமுகங்கள்

Posted by - February 10, 2017

அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைக நகர துறைமுகங்களை சுதந்திர துறைமுகங்களாக மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.