102 பாடசாலைகளுக்கு டெங்கு எச்சரிக்கை

242 0
நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 102 பாடசாலைகள் டெங்கு தொற்று பரவும் இடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.