அபிவிருத்தி இல்லை எனில், சிறிய நாடுகள் இலங்கையை முந்தும்.

350 0

நாட்டை தற்போது அபிவிருத்தி செய்யவில்லை எனில் 15 வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை முந்தி செல்லும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

குருநாகலையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் புதிய கைத்தொழில் வலையங்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

கண்டி மாவட்டத்திற்கு பாரிய தொரு வேலைத்திட்டம் உள்ளது.

தாம் கண்ட இலங்கை வேறு எனவும் தெரிவித்த பிரதமர், அணுகுண்டு தாக்குதலையடுத்து ஜப்பான், இலங்கையை விட பின்னிலையிலேயே இருந்தது.

தற்போது இலங்கை அனைத்து நாடுகளின் பின்னிலையில் உள்ளது.

எனவே நாட்டை தற்போது அபிவிருத்தி செய்து கொள்ளவில்லை எனில் மற்றைய நாடுகளை காட்டிலும் இலங்கை பின்னிலையில் நிற்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.