தமிழக அரசியல் பிரச்சினைக்கு இன்று முடிவு?

315 0

தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற பரபரப்பான சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டிய மாநில ஆளுனர் வித்தியாசாகர் ராவோ நேற்றையதினம் சென்னை திரும்பினார்.

அவர் முதலில் பன்னீர்செல்வத்தையும்இ பின்னர் சசிகலாவையும் சந்தித்தார்.

பன்னீர்செல்வம் தாம் ஏற்கனவே கையளித்திருந்த பதவி விலகல் கடிதத்தை மீளப்பெறுவது தொடர்பாகவும்இ தாம் சசிகலா தரப்பினரால் பலவந்தப்படுத்தப்பட்டமை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இதன்அடிப்படையிலான சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்து அவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதேநேரம் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும் உரிமையை சசிகலா நடராஜன் நேற்று ஆளுனரிடம் முன்வைத்தார்.

எனினும் அவர் சத்தியப் பிரமாணம் செய்வதற்கான திகதி உடனடியாக கூறப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் சசிகலா பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பிற்பகல் 2 மணி அளவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகாலாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வாரம் வெளியாகவுள்ள நிலையில்இ தற்போது அவர் முதல்வராக பதவி ஏற்பது உசிதமானது இல்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே இன்றைய தீர்ப்பு தொடர்பில் அனைவரினதும் எதிர்பார்ப்பும் குவிந்துள்ளது.

இதற்கிடையில்இ தமக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படும் 130 சட்ட மன்ற உறுப்பினர்களை சசிக்கலா சிறைபிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த 130 பேரும் பன்னீர்செல்வத்துடன் இணைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில்இ அவர்களை இரகசிய இடம்ஒன்றில் தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தமிழநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்களது தொகுதியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் காணாமல்போய் இருப்பதாக பொதுமக்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுக்கும் போராட்டம் ஒன்று சமுகவலைதளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

நடிகர் அரவிந்த்சுவாமியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே கமல்ஹாசன் போன்றவர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதேநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 30 பேர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்இ அவர்கள் தங்களை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பன்னீர்செல்வத்துடன் இணைந்துள்ள அதிமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர் மதிசூதனன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களின் தகவல்படி தற்போது பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு மேலோங்கி வருகிறது.

அதிமுகவின் கட்சித் தொண்டர்கள் தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒன்று திரண்டு வருகின்றனர்.

மேலும் சமுக வலைதளங்களிலும் அவருக்கான ஆதரவு பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.