சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

336 0

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 11 ஆயிரத்து 582 சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுற்றலா சென்றுள்ளனர்.

2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 580 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.