கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் கண்டுபிடிப்பு

379 0

பாடசாலை விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

காவற்துறை மற்றும் மாணவரின் உறவினர்களின் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடிய சாரானத் கல்லூரியில் 13 ஆம் தர கலைப் பிரிவு மாணவரே இவ்வாறு நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார்.

சிற்றூந்து ஒன்றில் வந்த நபர்கள் தன்னை கடத்தி தாக்கியதனை தொடர்ந்து மீண்டும் குளியாப்பிடிய நகரில் விட்டுச் சென்றதாக குறித்த மாணவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் அறியவந்துள்ளது.

மாணவரை கடத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குளியாப்பிடி காவற்துறை தெரிவித்தது.