சரண் அடைய அவகாசம்: சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு?
சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை உறுதி செய்தது. நீதிபதி குன்ஹா அளித்த தண்டனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு சென்னை அடுத்த கூவாத்தூரில் தங்கியிருந்த சசிகலாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சந்தித்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) பங்களிப்பை வழங்கியுள்ளது. குறித்த இரு போராட்ட தளங்களுக்கும் இன்று 14.02.2017 செவ்வாய்க்கிழமை சென்று, நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் அவர்களைப் பாதுகாத்த உழைக்கும் மக்களையும் தாக்கிய அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 12-2-2017 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. சல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்களும், மே பதினேழு இயக்கத் தோழர்களும், பல்வேறு இளைஞர்களும் காவல்துறை மற்றும் அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசினர். காஞ்சி
தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சசிகலா அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச் சாமி தெரிவு செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் இன்று மாலை 5.30 அளவில், பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதன்போது ஆட்சி அமைக்கும் உரிமையை அவர் கோரியதாக தமிழக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ப்ளின் பதவி விலகியுள்ளார். வெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ராஜதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் பொருளாதாரத் தடை குறித்து வொஷிங்டனிலுள்ள ரஷ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது. இந்த நிலையிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ப்ளின்;, பதவி விலகியுள்ளதாக வெள்ளை
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற பேரணியொன்றின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளயில் வந்த தாக்குதல்தாரி ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாத் வுல் – அஃரர் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்தாளுனர்களால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடும் வரட்சி காரணமாக 7 லட்சத்து 9 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. திருகோணமலை, களுத்துறை, மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய நீரின்மை காரணமாக விவசாயிகளுக்கு உரிய அறுவடையை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.