அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ப்ளின் பதவி விலகியுள்ளார்.
வெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராஜதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் பொருளாதாரத் தடை குறித்து வொஷிங்டனிலுள்ள ரஷ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது.
இந்த நிலையிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ப்ளின்;, பதவி விலகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

