நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு

272 0

சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) பங்களிப்பை வழங்கியுள்ளது.

குறித்த இரு போராட்ட தளங்களுக்கும் இன்று 14.02.2017 செவ்வாய்க்கிழமை சென்று, நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கத்தக்கவாறான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

U
U
U