ஆட்சி அமைக்கும் தீவிரத்தில் இரண்டு அணிகள்

247 0

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சசிகலா அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச் சாமி தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவர் இன்று மாலை 5.30 அளவில், பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது ஆட்சி அமைக்கும் உரிமையை அவர் கோரியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழகத்தின் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம், பொறுப்பு ஆளுநருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்ச் செல்வத்தின் சார்பில் மாலை 7
மணியளவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின மூத்த உறுப்பினரான மைத்ரேயன், ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் தற்போது முக்கிய ஆலோசனை இடம்பெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஆட்சியமைப்பு குறித்து ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரையில் உத்தியோக பூர்வ அறிவிப்பு எவையும் வெளியாக வில்லை.