சரண் அடைய அவகாசம்: சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு?

381 0

சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கூறிய தீர்ப்பை நேற்று உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உடனடியாக சரண் அடைய வேண்டும் என்பதற்கு பதிலாக, “நான்கு வாரங்களில்” சரண் அடைய அனுமதி வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்வதற்கு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்யப்படும் என்று டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.