லாகூர் பேரணி மீது குண்டுத் தாக்குதல்

389 0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற பேரணியொன்றின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளயில் வந்த தாக்குதல்தாரி ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜமாத் வுல் – அஃரர் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவ சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்தாளுனர்களால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.