Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

சந்திரிக்கா காலாவதியான புடின் – உதய கம்மம்பில

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பவர் காலாவதியான “புடின்” போன்ற ஒருவர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார். சுவையான உணவுப் பொருளான புடினை காலாவதியானதன் பின்னர் சுப்பர் மார்க்கட்டில் காட்சிப் பொருளாக வைத்தாலும் அது பெருமதியற்ற ஒன்றாகும். இதுபோன்று தான் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிலையும் ஆகும். நாட்டைத் தாரைவார்க்கும் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இவரிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் …

Read More »

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்? சஜித்? கரு? – நளின்

நாட்டில் முதலில் நடக்கப் போவது எந்தத் தேர்தல் என்பதைப் பொருத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளோம் என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார். நேற்று (21) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில்? சஜித்? கரு ? ஆகிய மூவரில் யார் …

Read More »

ஹெரோயின் மற்றும் ஆன்சி போதைபொருளுடன் இரு ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது

ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.  ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டு சென்றகொன்டிருந்த போது ஹட்டன், மல்லியப்பு சந்தில் வைத்து குறித்த காரை பொலிஸார் பரிசோதனை செய்துள்ளனர்.  இதன்போது குறித்த இரண்டு …

Read More »

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளிடம் உதவி

நாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை நாடவுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.  சேனா படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் நேற்யை தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சேனா படைப்புழுவின் மாதிரியை அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த விவசாய அமைச்சு, நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இந்த படைப்புழுவானது சுமார் …

Read More »

பாராளுமன்ற மோதல்,அறிக்கை இன்று சாபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையானது சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்து, அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, …

Read More »

பொலிஸாரிடம் அறைவாங்கினேன்-சிறிசேன

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் இருந்ததாகவும் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியதாகவும் தனது இறந்தகால நினைவுகளை மீட்டிப்பார்த்தார் மைத்திரிபால சிறிசேன .  நேற்று சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு தொடர்ந்து தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை சுவாரஸ்யமாக தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் …

Read More »

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது!

புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியொன்றில் வெட்டப்பட்ட குழியொன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வீதியை புனரமைக்கும் பணியானது மேற்படி உப தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டபோது, வீதி புனர‍மைக்கும்போது அது தொடர்பான முன் எச்சரிக்கை அறிவித்தல் பதாதை காட்சிப் படுத்தப்படாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் …

Read More »

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கழுத்தை அறுப்பதைபோன்று …

Read More »

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  புதிய அனுமதிப்பத்திரம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »