ஜேர்மன் ஊடகத்துக்கு ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்ததை வரவேற்கிறோம் -சரத் வீரசேகர எம்.பி.கூறுகிறார்

119 0

 

ஜேர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தக்க பதிலடி கொடுத்ததை முழுமையாக வரவேற்கிறோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியு டன் நான் முழுமையாக இணங் குகின்றேன். வெள்ளையர்கள் குறிப்பிடுவது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது. என தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வெள்ளையர்கள் குறிப்பிடுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.ஜேர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தக்க பதிலடி கொடுத்ததை முழுமையாக வரவேற்கிறோம்.இவ்விடயத்தில் என்றார்.
ஜனாதிபதியுடன் நான் முழுமையாக இணங்குகிறேன்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்திலான உறவு பாரிய நெருக்கடி உள்ளாக்கப்பட்டுள்ளது.பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கனடா இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக கனடா பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்த போது அதை தேசிய பிரச்சினையாக கருதி முழு இந்தியாவும் கனடாவுக்கு எதிராக குரல் கொடுத்தது.ஆனால் இலங்கையில் அவ்வாறான தன்மை கிடையாது.சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக குற்றச்ச ட்டு முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சியினர் அதை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆகவே தேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் இந்தியாவை சிறந்த எடுத்துக் காட்டாகக் கொள்ள வேண்டும்.