தூக்க கலக்கத்தால் வீண்விரயமான எரிபொருள்!

109 0

அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கியை கனரக வாகனம் (பவுசர் ) அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.

தூக்க கலக்கத்திலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து அப்புத்தளை பொலிஸார் பூரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

இந்த விபத்தில் எரிபொருள் முற்றாக வீண்விரயம் ஆனவுடன் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.