நீதிக்கான மாபெரும் கண்டன பேரணி முல்லைத்தீவு இளைஞர்கள் அழைப்பு 

195 0

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நேசராசா சங்கீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் 09 ஆம் திகதி  காலை 9 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திற்கு முன்பாக நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமாகி அங்கிருந்து பொதுசந்தை ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மாவட்ட செயலாளர் ஊடாக நீதி அமைச்சின் செயலாளருக்கும் மகஜர் கையளிக்கப்பட இருக்கின்றது.

எமது நோக்கமாக முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் , நீதித்துறை அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதி கேள்விக்குறியாகியுள்ளது. நீதியை எதிர்பார்த்து இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வடமாகாணத்திலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , இளைஞர்கள், பொது மக்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.