Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் கிடையாது!

அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் வழங்காமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது!

சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

Read More »

கல்விக்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம் – மைத்திரி!

தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »

காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்!

மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

Read More »

ஏறாவூர் இரட்டைப் படுகொலை – ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜுலை மாதம் 7 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகர பிரதேசத்தில் வசித்துவந்த 56 வயதுடைய தாயும், அவரது 32 வயது மகளும் கடந்த வருடம் செப்டெம்பெர் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகத்துக்குரியவர்களும் கடந்த …

Read More »

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவிவிலகல்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தமது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார். மருத்துவ காரணங்கள் காரணமாகவே தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் இதையடுத்து, புதிய பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

மலையக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கல்விக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அத்த வகையில் மலையக மாணவர்களின் நன்மை கருதி நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் இலவச கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி கதிரேசன் பெண்கள் பாடசாலையில் நாளை காலை 8 மணி முதல் 5 மணி வரையிலும், ஹட்டன் புளியாவத்தை தமிழ் மகா …

Read More »

நீர் பிரச்சினைக்கு காரணம் என்ன? – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம்

நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாதமை காரணமாகவே நீர் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌதீக ரீதியில் நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு, இலங்கையைப் போன்று பத்து மடங்கு பாரிய நிலப்பகுதிக்கு போதுமானதாக காணப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டிளுள்ளார். நாட்டில் நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய தனியொரு நிறுவனம் காணப்படாமை நீர் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய …

Read More »

உதய கம்மன்பில ஒற்றர்போல செயற்பட்டார் – நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தமது கட்சியில் ஒற்றர்போல செயற்பட்டதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் கம்மன்பில கூறியதாக நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுடன் …

Read More »