இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து

Posted by - December 14, 2017

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது. டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று (14) மதியம் இவ்விபத்து சம்பவித்துள்ளது. நோர்வூட் பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை

Posted by - December 14, 2017

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இவ் வழக்கானது விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி உத்தரவானது நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை மற்றும்

முத்துமாரியம்மன் ஆலயம் உடைத்து திருட்டு : லிந்துலையில் சம்பவம்

Posted by - December 14, 2017

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெளலினா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் விக்கிரகத்திற்கு அணிவித்திருந்த பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்களும் உண்டியல் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு பூஜை முடிந்தவுடன் நடை சாத்திய பின்னரே கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கக் கூடுமென கோயில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை பூஜைக்காக கோவிலுக்குச் சென்ற போதே திருட்டு நடந்தேறியிருந்ததை குருக்கள் கண்டு பரிபாலன சபைக்கு தெரிவித்ததையடுத்து லிந்துல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

Posted by - December 14, 2017

ஊனம் உடலில் இல்லை மற்றவர்களின் மனதில் என்பதை உலகறிய எடுத்துக் கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம் என்பதற்கமைய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மிகவும் சிறப்ப்பாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை  காலை 10 மணியளவில் வாழ்வகம் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வவுணதீவில்  மிகவும் சிறப்பாக  இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு விசேட தேவையுடையோர் மற்றும் சமூக அமைப்புக்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரமற்றது – பரிசோதனை முடிவு

Posted by - December 14, 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் ஊடாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வின் மூலம் இது தரமற்ற எரிபொருள் என தெரியவந்துள்ள போதும்,இரண்டாம் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் விமானங்களுக்கான தரமற்ற எரிபொருளை சந்தையில் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 10,000 மெட்றிக் தொன் எரிபொருள் தொடர்பில் தற்​போது இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு

மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 14, 2017

மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சாரசபை தலைமைக் காரியாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அரசியல் தலையீடுகளுடன் மின்சார சபையில் தொழில் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்வைக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் தமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனில் நாடு பூராகவும் பாரிய பேரணிகளை நடத்தவுள்ளதாகவும் மின்சார சபையின்

தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Posted by - December 14, 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலையடி வேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு

Posted by - December 14, 2017

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் ஜப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போதே திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஊடாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கமுடியும் என்று கனஷவா ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலான பல

அரச நூலகமொன்றில் கொள்ளை

Posted by - December 14, 2017

பண்டாரகம பிரதேச சபையினால் நடாத்தப்படும் பொது நூலகத்தின் அலுவலகத்திலிருந்து 73,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதவு, பூட்டுக்கள் உடைக்கப்படாத நிலையில் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அலுவலக நடவடிக்கைகளை நன்கறிந்த ஒருவரே இக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - December 14, 2017

வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையில் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.