இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து

318 0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று (14) மதியம் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

நோர்வூட் பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment