மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

586 27

ஊனம் உடலில் இல்லை மற்றவர்களின் மனதில் என்பதை உலகறிய எடுத்துக் கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம் என்பதற்கமைய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மிகவும் சிறப்ப்பாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை  காலை 10 மணியளவில் வாழ்வகம் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வவுணதீவில்  மிகவும் சிறப்பாக  இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு விசேட தேவையுடையோர் மற்றும் சமூக அமைப்புக்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment