இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு

344 0

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் ஜப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போதே திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஊடாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கமுடியும் என்று கனஷவா ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment