மட்டு. செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு
கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று உத்தரவிட்டார்.
கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று உத்தரவிட்டார்.
ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தமிழீழ் விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட போட்டி 2017 நெதர்லாந்தில் கடந்த 28-10-2017 சனிக்கிழமை அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் , ஈகச்சுடர் ,மலர்வணக்கம் அமைதிவனக்கதுடன் போட்டிகள் ஆரம்பமானது. கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முடிவுகள்.6 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் 1. பேவர்வைக் தமிழர் ஒன்றியம் A 2. மெரிசல் விழையாட்டு கழகம் ஜேர்மனி 3. கலாட்டா போய்ஸ்
முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, அப் பகுதி மக்கள் 30 பேர் சேர்ந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விவாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 12ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பளிக்கும் வரை, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட, நீதிமன்றம் தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது. இது இவ்வாறு இருக்க, முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவது
நாட்டின் தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்துள்ள கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள எக்கல பிரதேசத்தில் விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுகொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேல்மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விமான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்படப்பட்டுள்ளது. பெறுமதி ஒன்று சேர்க்கின்ற தொழில்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தை ஸ்தாபித்தல். சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட
யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்பட்டதாக தெரியவருகிறது. தற்போது பரவலாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது. வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் அதிகமான பனிமூட்டம் நிலவியதாகவும் இதனால் போக்குவரத்தின் போது வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கைது செய்யப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் பொதுச்செயலாளர் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 31 பேரையும் மாவட்ட அமைப்பாளர்கள் 3 பேரையும் நியமித்ததுடன், திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும் (02) நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார். இதுதொடர்பிலான விவாதம் கடந்த திங்கட்கிழமை அரசியல் யாப்பு பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளதால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளது. இன்றைய அமர்வு இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளதாவது; சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு – தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே – மாணவர்களை