அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும் (02) நடைபெறவுள்ளது.
அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இதுதொடர்பிலான விவாதம் கடந்த திங்கட்கிழமை அரசியல் யாப்பு பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
குறித்த விவாதத்தில் இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளதால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்றைய அமர்வு இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

