விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

398 0

நாட்டின் தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்துள்ள கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள எக்கல பிரதேசத்தில் விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுகொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேல்மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விமான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்படப்பட்டுள்ளது.

  • பெறுமதி ஒன்று சேர்க்கின்ற தொழில்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தை ஸ்தாபித்தல்.
  • சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.
  • வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.
  • ஊடக நகரம்.
  •  நடுத்தர வர்க்கத்தினர்களுக்கான வீடு மற்றும் பொது வசதிகள் சேவை.

மேற்கூறப்பட்ட உப வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய இவ்விமான நகர வேலைத்திட்டத்தினை அரச – தனியார் கூட்டின் அடிப்படையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அதற்கு அவசியமான, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய 80 ஏக்கர் நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment