ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கட்சியின் பொதுச்செயலாளர் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 31 பேரையும் மாவட்ட அமைப்பாளர்கள் 3 பேரையும் நியமித்ததுடன், திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

